GuidePedia

0
                     தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள் 



ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து  பூட்டுமாறு அவனது மனைவியிடம் கூறினான்.அவன் பேசிக்கொண்டு இருப்பதை அவன் வீடிற்கு வெளியே இருவர் மறைந்திருந்து கேட்பதை தெனாலி உணர்ந்தான்.மறைந்திருப்பவர்கள் திருடர்கள் என்று அறிந்து அவனது மனைவியிடம் கூறினான்.இப்பொழுது என்ன செய்வது?என்று தெனாலியிடம் அவனது மனைவி கேட்டாள்.தெனாலி அவனது புத்தியை தீட்டி அவனது மனைவியிடம் உரத்தக்குரலில் "அன்பே நமது ஊரில் திருடர்களின் தொல்லை அதிகமாகி விட்டது.ஆதலால் நமது பொற்காசுகளை ஒரு பெட்டியில் வைத்து  கிணற்றில் போட்டு விடலாம்" என்று கூறினான்.இதை கேட்ட அந்த இரண்டு திருடர்களும் "அனைவரும் உறங்கட்டும்.பின் விடிவதற்குள்  நாம் கிணற்றில் உள்ள நீரினை முழுவதும் இறைத்துவிட்டு பெட்டியை எடுத்து  சென்று விடலாம்" என்று திட்டம் தீட்டினர்.
தெனாலி அவனது மனைவியிடம் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வரச்சொன்னான்.தெனாலியின் மனைவியும் அவன் சொன்னது போல் அந்த பெட்டியில் கற்களை நிரப்பி கொண்டு வந்தாள்.அந்த பெட்டியை தெனாலி கிணற்றில் போட்டுவிட்டு வீடிற்கு சென்று உறங்கினான். பின் அந்த இரண்டு திருடர்களும் அவர்கள் போட்ட திட்டத்தின் படி தண்ணீரை இறைக்க ஆரமித்தனர்.அவர்கள் தண்ணீரை இறைத்து இறைத்து ,ஒருவழியாக பெட்டியை கைப்பற்றி விட்டனர்.அந்த இரண்டு திருடர்களும்  மகிழ்ச்சியுடன் பெட்டியைத்திறந்தனர்.அதில் கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.இதனைக் கண்டு சிரித்தபடி வந்த தெனாலி சிப்பாய்களைக் கொண்டு அந்த இரண்டு திருடர்களையும் பிடித்துச் செல்லுமாறு கட்டளையிட்டான்.அந்த திருடர்கள் செய்த ஒரு நல்ல வேலை என்னவென்றால் தண்ணீரை இறைத்து இறைத்து அங்கு உள்ள பயிர்களுக்கு தண்ணீரை பாயிச்சினர்.இதனால் தெனாலிக்கு அந்த வேலைமிச்சம் ஆனது..............

Post a Comment

 
Top