GuidePedia

0

 தெனாலிராமனின் திறமையால் தோற்றுப்போன வித்தைக்காரன் 




ஒரு நாள் கிருஷ்ண தேவராயருடைய அரசவைக்கு வித்தைக்காரன் ஒருவன் வந்தான்.அவன் தன்னுள் இருக்கும் திறமையை அந்த அரசவையில் வெளிபடுத்தினான்.அப்பொழுது அவன் அங்கு கூடியிருந்த மக்களிடம் ஒரு சவாலை தெரிவித்தான்.அது என்னவென்றால் "இந்த அரசவையில் என்னை வெல்ல யார் இருக்கிறீர்கள்?அப்படி யாரேனும் இருந்தால் என்னை வெல்லுங்கள் பார்ப்போம்" என்று கூறினான்.அந்த அரசவையில் இருந்த மந்திரிகளும்,மக்களில்  யாரும்  முன்  வரவில்லை.அப்பொழுது அங்கு இருந்த தெனாலி "உன்னை வெல்ல நான் தயாராக உள்ளேன்"  என்று கூறி அந்த  வித்தைக்காரன் முன் வந்து நின்றான்.ஆனால் அந்த அவையில் இருந்த கிருஷ்ணதேவராயரின் மந்திரிகள் தெனாலியிடம் எங்களாலும் இங்கு இருக்கின்ற மக்களாளுமே முடியவில்லை  ஆதலால் நீ  சென்று தோற்றுப்போகாதே என்று கூறினார்கள்.ஆனால் தெனாலி அவர்கள் கூறியதை பொருட்படுத்தாமல் அந்த வித்தைக்காரனின் சவாலை ஏற்றுக்கொண்டான்.
தெனாலி அந்த வித்தைக்காரனிடம் "நான் கண்களை மூடிக்கொண்டு செய்யும் ஒன்றை நீ கண்ணைத் திறந்து கொண்டே செய்ய வேண்டும்" என்றான்.இவ்வளவு தானா  என்று நம்மால் எதையும்  செய்ய முடியும் என்ற தலைக்கனத்தில் அந்த வித்தைக்காரன் "சரி போட்டிக்கு நான் தயார்" என்றான்.
தெனாலி அங்கு இருந்த சிப்பாயிகளிடம் கொஞ்சம் மணலைக் கொண்டு வர சொன்னான்.பின் தெனாலி அந்த மணலைக் கையில் எடுத்து கண்களை மூடியவாறு அவன் கண்ணில் போட்டுக்கொண்டான்.அதேபோல் தெனாலி செய்ததை அந்த வித்தைக்காரன் கண்களை திறந்து கொண்டு செய்ய வேண்டும்.ஆனால் வித்தைக்காரன் தன்னால் முடியாது என்று தெரிந்து தலைகுனிந்து அந்த அரசவையை விட்டு வெளியேறினான்.
தெனாலியின்  திறமையைக் கண்டு வியந்த கிருஷ்ணதேவராயர் தெனாலிக்கு புகழாரம் சூட்டி பொற்காசுகள் வழங்கினார்.அவையில் இருந்த  மந்திரிகளும்,மக்களும் தெனாலியை போற்றினர்.

Post a Comment

 
Top