GuidePedia

0
                                             
காகத்தின் பேராசையால் அதற்கு கிடைத்த தண்டனை  

ஒரு காட்டில் காகம் ஒன்று மரத்தில் கூடு கட்டி வசித்து வந்தது.அங்கு கழுகு ஒன்று மலையின் மேல் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அது மிகவும் வலிமையுடையது.அந்த கழுகு வந்த நாட்களில் இருந்து அதன் செயல்களை ஒவ்வொன்றாக பார்த்து தானும் அதே போல் ஆக வேண்டும் என்று காகம் நினைத்தது.
ஒரு நாள் கழுகு வானில் மிக உயரமாக பறக்க ஆரமித்தது.அது கீழிறங்க துணையாக இருந்து உதவி செய்வது அதன் இறக்கை  மற்றும்  கால்கள் மட்டுமே.
இதனை  கீழிருந்து பார்த்து கொண்டிருந்த காகம் தானும் அந்த கழுகினை போல் மிக உயரமாக பறக்க வேண்டும் என்று பேராசை கொண்டது.
அடுத்த நாள் கழுகு போல் தானும் பறக்க வேண்டும் என்று காகம்  முயற்சி செய்து வானில் பறக்க ஆரமித்தது.அதன் பேராசை அதிகமாகி வானில் மிக உயரத்தில் பறந்தது.ஆனால் காகத்தால் கீழிறங்க அதன் கால்களும் இறக்கையும் உதவி செய்யாது என்று அந்த காகத்திற்கு தெரியாமல் பேராசையால் வானில் பறந்தது.
கீழிறங்க  தெரியாமல் உயரமாக பறந்த காகம் கீழே விழுந்து அதன் அலகு   உடைந்தது.காகத்தின் பேராசையால் அது தன் அலகை உடைத்தது கொண்டது தான்மிச்சம்.

Post a Comment

 
Top