GuidePedia

0


இரண்டு ஆடுகளின் வாக்குவாதம் 





ஒரு நாள் இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் இருந்து வந்தன.அந்த ஆடுகள் வந்த இடத்தில் பாலம் ஒன்று இருந்தது.அது ஒரு ஒற்றை அடி பாதை ஆகும்.ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.
அந்த இரண்டு ஆடுகளில் முதலில் அந்த பாலத்திற்கு வந்த ஆடு மற்றொரு ஆடிடம் சொன்னது "நான்தான் முதலில் வந்தேன் அதனால் நீ பின்னால்  செல்" என்றது.அதற்கு இரண்டாவதாக வந்த ஆடு "நான் ஏன் செல்ல வேண்டும்?வேண்டுமென்றால்  நீ பின்னால்  செல்" என்றது.
இரண்டிற்கும்  வாக்குவாதம் நடந்தது யார் முதலில் செல்வது யார் பின்னால்  செல்வது என்று.
முதலில் வந்த ஆடு சொன்னது நாம் ஏன் இப்படி சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்?இப்டி சண்டை போட்டால் நாம் இருவருமே பாலத்தை கடந்து  அவரவர் வீட்டிற்குச் செல்ல முடியாது.ஆகவே நான் இதற்கு ஒரு வழி சொல்லட்டுமா? என்று இரண்டாவது ஆடிடம் கேட்டது.
இரண்டாவதாக வந்த ஆடும் சரி சொல் என்றது.
முதலில் நீ  கீழே படு நான் உன்மேலே ஏறி அந்த பக்கம் சென்று விடுகிறேன்.அதன் பின் நீயும்  உன் வழியில் செல்லலாம் என்று முதல் ஆடு இரண்டாவது ஆடிடம் சொன்னது.இரண்டாவது ஆடும் சரி என்றது ஏனெனில் முதல் ஆட்டை விட இரண்டாவது ஆட்டிற்கு பலம் அதிகம்.எனவே முதல் ஆட்டை தாங்கும் வலிமை அந்த ஆட்டிற்கு உள்ளது.
பின்னர் முதல் ஆடு சொன்னது போல் இரண்டு ஆடுகளும் செய்து தங்கள் வழிகளில் சென்றன.

Post a Comment

 
Top