GuidePedia

0
                                 யானையின் திறமையால் அதற்கு கிடைத்த   நண்பர்கள்   

ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது.அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது.யானை முதலில் மரத்தில்  ஒரு குரங்கை பார்த்தது.அந்த குரங்கிடம் சென்று "நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்டது.அதற்கு அந்த குரங்கு"நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய் அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது" என்று குரங்கு சொன்னது.
அடுத்ததாக யானை முயல் ஒன்றை பார்த்தது.அந்த முயலிடம் சென்று "என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.அதற்கு அந்த முயல் "நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது" என்று சொன்னது.

அடுத்ததாக யானை தவளை ஒன்றை பார்த்தது.அந்த தவளையிடமும் சென்று "என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாய என்று கேட்டது.அதற்கு தவளை"என்னை போல் உன்னால் தாவ முடியாது".ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.


 கடைசியாக யானை நரி ஒன்றை பார்த்தது.அதனிடமும் சென்று "எனை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா" என்று கேட்டது.நரியும் "நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய்" ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.



அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்?என்று யானை கேட்டது.
அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு  வருகிறது.அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.


யானை இதற்கு ஒரு வழி கொண்டுவரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது.புலியை பார்த்து ஏன் இப்படி  செய்கிறீர்கள் என்று கேட்டது.அதற்கு அந்த புலி இது உனக்கு தேவையில்லாத விஷியம் என்று சொன்னது.


யானை அதற்கு பாடம் கற்பிக்கும்வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது.காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.


இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.

Post a Comment

 
Top