GuidePedia

0

                    ஒருபோதும் பொய் சொல்லாத தமிழ் மனிதன்



ஒரு காலத்தில் தெனாலிராமன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு புத்திசாலி.ஒருபோதும் பொய் சொல்லாதவன்.அவன் வாழ்ந்து வந்த ஊரில் எல்லா  மக்களுக்கும் அவனை பற்றி தெரியும்.
ஒரு நாள் அரசனுக்கு தெனாலியை பற்றி தெரிய வந்தது.அதனால் அவனை அழைத்து வர சொல்லி பணியாட்களிடம் சொன்னார்.தெனாலியும் ராஜா  அரண்மனைக்கு வந்தான்.
ராஜா அவனை பார்த்து நீ பொய்யே சொல்ல மாட்டாய் என்று மக்கள் எல்லோரும் உன்னை பற்றி சொல்கிறார்கள் என்று தெனலியை பார்த்து கேட்டான். தெனாலியும்  ஆமாம்  அரசே அது உண்மை தான் என்று சொன்னான். அரசும் சரி அது நல்லது தான் அனால் நமுடைய நாக்கை நம்ப முடியாது எப்பொழுது பொய் சொல்லும் என்று ஆதலால் கவனமாக இரு என்று தெனாலிடம் அரசன் சொன்னான்...............

ஒரு சில நாட்களுக்கு பின்னர் தெனாலியை மீண்டும் அழைத்து வர சொல்லி அரசன் உத்தரவிட்டான்.தெனாலியும் அரண்மனைக்கு வந்தான்.அங்கு மக்கள் அனைவரும் கூடி இருந்தனர்.ராஜா வேட்டைக்கு தயாராக இருந்தான்.தெனாலியை பார்த்து அரண்மனில் ராணியிடம் சென்று நாளை மதிய உணவிற்கு நான் வருவதாகஉம் அது பெரிய விருந்தாக இருக்க வேண்டும் என்றும் கூற சொன்னார்.தெனாலியும் ராணியிடம் சென்று அரசன் சொன்னதை கூறினார் .
ஆனால் அரசன் வேட்டைக்கு செல்லவில்லை.அவன் கூறியது பொய்யானது என்று சொல்லி சிரித்தான்.அசன் கூறியது பொய் என்றால் தெனாலி கூறியதும் பொய் தான்.ஆதலால் தெனாலி பொய் சொல்லி விட்டான் நான் வென்று விட்டேன் என்று அரசன் நகைத்தான்.
 அரசன் ராணியிடம்  சென்று தான் வேட்டைக்கு செல்ல வில்லை இது தெனாலிக்காக செய்த செயல் அவனை பொய் சொல்ல வைத்து விட்டேன்  என்று சொல்லி சிரித்தான்.

ஆனால் ராணியோ தெனாலி சொன்னது பொய் இல்லை.ஏனென்றால் அவன் நீங்கள் கூறியதை தானே என்னிடம் சொன்னான்.அவனுக்கு அது பொய் என்று தெரியாது.ஆதலால் அவன் பொய் சொல்லவில்லை என்று கூறினால்.அரசனும் தனது தவறை உணர்ந்து தெனாலியை புகழ்தான்..அவனுக்கு தக்க சன்மானம் வழங்கினான்.
 
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top