GuidePedia

0
               தெனாலிராமன்   வளர்த்த பூனையின் வாயிலாக தனது தவற உணர்ந்த                      
                                            மன்னர் கிருஷ்ணதேவராயர
  ஒரு நாள் விஜயநகரில் வாழ்ந்த மக்கள்  கிருஷ்ணதேவராயர் அரசவைக்குச் சென்று அவரிடம்"மன்னா நமது நகரில் எலிகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது.பண்ணைகளில் உள்ள பயிர்களையெல்லாம் எலிகள்  நாசம் செய்கிறன.ஆதலால் நீங்கள் தான் மன்னா இதற்கு ஒரு வழிக்காட்ட வேண்டும்" என்று கூறினார்கள்.
கிருஷ்ணதேவராயரும் அவரது சேவர்களும் விவாதித்த பின் ஒரு முடிவிற்கு வந்தார் மன்னர்.அவர் வீட்டிற்கு ஒரு பூனையையும்,அது வளர்வதற்கு ஒரு பசுமாட்டினையும் வழங்கினார்.மாதத்தின் இறுதியில் பூனை ஆரோக்கியத்துடன் வளர்கிறதா?என்று பார்வையிடப்படும் என்று அறிவித்தார்.
பிறகு மன்னன் சொன்னது போல் அந்த பூனைகள் தினமும் பாலை குடித்துவிட்டு கொழுத்துபோய் எலிகளை பிடிக்காமல் வீட்டில் தூங்கின.ஆனால் தெனாலி மட்டும் அவனுக்கு அளித்த பூனைக்கு பாலை கொடுக்காமல் இருந்தான்.மாத இறுதியில் அனைத்து பூனைகளும் மன்னரின் பார்வைக்காக அழைத்து வரப்பட்டது.கிருஷ்ணதேவராயர் அனைத்து பூனைகளுக்கும் ஒரு கிண்ணத்தில் பாலைவைக்குமாறு கூறினார்.அங்கு இருந்த அனைத்து பூனைகளும் பாலை குடித்தன.ஆனால் தெனாலியின் பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை.அதனை கண்ட மன்னர் தெனாலியின் மீது கோபம் கொண்டார்.தெனாலியை பார்த்து "ஏன் உன்னுடைய பூனை மட்டும் பாலை குடிக்கவில்லை?நீ என்ன செய்தாய்?"என்று கேட்டார்.அதற்கு தெனாலி "மன்னா இங்கு உள்ள பூனைகள் எல்லாம் பாலை மட்டுமே குடித்துவிட்டு  எலிகளை பிடிக்காமல் கொழுத்துப்போய் உள்ளது.ஆனால் நான் பூனையை கொண்டு சென்ற அன்றே அதற்கு சூடான பாலை வைத்தேன் அதை குடித்த பூனை நாக்கில் எரிச்சலுடன் ஓடியது.அதன் பின்னர் பாலை வைத்தால் அதைக் குடிக்காமல் உணவிற்காக எலிகளை பிடித்து சாப்பிட்டது.இப்பொழுது என் வீட்டில் எலிகளின் தொல்லை இல்லை" என்று கூறினான்.
இதனைக் கேட்ட மன்னர் தனது தவறை உணர்ந்து தெனாலி செய்ததை போல் அனைத்து மக்களையும் செய்யுமாறு உத்தரவிட்டார்.பின்னர் தெனாலியை மன்னரும் அங்கு உள்ள மக்களும் பாராட்டினர்.

  
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top